கோவை: கோவை அன்னூர் அருகே சத்துணவு பெண் ஊழியர் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள புதுப்பாளையம் ஏ.டி காலனியைச் சேர்ந்த செல்வம் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (38), இவர் குன்னத்தூர் ராம் பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை பார்த்து வந்தார்.
மேலும், இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகள் ஸ்வேதா (17), இவர் பிளஸ்-2 படித்துவிட்டு அழகுக்கலை பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு செல்வத்துக்கும் அவரது மனைவி தனலட்சுமி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தனலட்சுமி கோபித்துக் கொண்டு தனது மகள் ஸ்வேதாவுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. செல்வம் பல இடங்களில் அவர்களை 2 பேரையும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தனலட்சுமியும், சுவேதாவும் அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து பிணமாக கிடந்தனர். கணவரிடம் கோபித்துச் சென்றதால் லட்சுமி வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த சின்னச்சாமி என்பவரது தோட்டத்துக்குச் சென்று உள்ளார்.
மனவேதனையில் இருந்த அவர் மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக மகளின் சுடிதார் துப்பட்டாவை வாங்கி மகளையும் அவரையும் சேர்த்து கட்டி உள்ளார். பின்னர் கிணற்றில் குதித்து உயிரை விட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் தாய் மற்றும் மகளின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.