வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த கருமலை தேயிலைத் தோட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுஉலா வருகின்றன.

இதையடுத்து தேயிலை தோட்டக் காவலர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால், யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதியில் கொழுந்து பறிக்கும் பணிகள் மற்றும் உரமிடுதல் மருந்தடிக்கும் பணிகள் பாதிப்படைந்துள்ளன. தொழிலாளர்கள் மாற்று பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்இரவு நேரம் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர்.