வேலை காலி, ஆளைக் காணோம்: கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர் நேர்காணலில் 214 பேர் ஆப்சென்ட்!

கோவை: வேலை கிடைக்காமல் பலர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் வேலை காலியாக இருந்தும் அந்த இடத்தில் சேர்வதற்கு ஆட்கள் வரவில்லை.கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பதவிக்கான நேர்காணலில் பங்கேற்காமல் 214 பேர் ஆப்சென்ட் ஆனதாகக் கூறப்படுகிறது.


கோவை: வேலை கிடைக்காமல் பலர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் வேலை காலியாக இருந்தும் அந்த இடத்தில் சேர்வதற்கு ஆட்கள் வரவில்லை. கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பதவிக்கான நேர்காணலில் பங்கேற்காமல் 214 பேர் ஆப்சென்ட் ஆனதாகக் கூறப்படுகிறது.

கோவை மாநகராட்சியில், 103 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதில், 34 பணியிடங்கள், சீனியாரிட்டி அடிப்படையில் துப்புரவு மேற்பார்வையாளர்கள்/ பதிவுரு எழுத்தர்கள்/ டிரைவர்களுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள 69 பணியிடங்களுக்கான நேர்காணல் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மொத்தம் 654 பேருக்கு நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

உதவி கமிஷனர்கள் முருகன், சுந்தர்ராஜன், செந்தில்குமார் ரத்தினம், ரவி, அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான குழுவினர் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். நேர்காணலில் 440 பேர் பங்கேற்ற நிலையில் 214 பேர் நேர்காணலுக்கு வரவில்லை. இதற்கிடையே, சீனியாரிட்டியில் விடுபட்டோருக்கு இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கக்கோரி, கமிஷனரிடம் சிலர் மனு கொடுத்தனர். துப்புரவு மேற்பார்வையாளர்களில் 4 பேர், தங்களுக்கு இளநிலை உதவியாளர் பணி வேண்டாம் என்று கடிதம் கொடுத்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...