கோவையில் மேம்பால கட்டுமானப் பொருள்களை திருடி விற்ற 6 பேர் கைது!

கோவை: கோவையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு மேம்பாலங்கள் கட்டுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக திருடி விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் மேம்பாலப் பணிகள்நடைபெற்று வருகின்றன. அங்கு மேம்பாலங்கள் கட்டுவதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக திருடி விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் ராமநாதபுரம், திருச்சி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான கம்பி மற்றும் கட்டுமானப் பொருட்களை அந்தந்த பகுதியில் வைத்துள்ளனர். இந்நிலையில் இரும்புக் கம்பி உள்ளிட்ட 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்கள் திருட்டு போனது. புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வந்தனர்.

விசாரணையில், கோட்டை புதுாரைச் சேர்ந்த கபார்கான், அப்துல்காதர், மைல்கல் பாரதி நகரைச் சேர்ந்த ஷாருக்கான், உக்கடத்தைச் சேர்ந்த பீர்முகமது, கோட்டை மேட்டைச் சேர்ந்த முகமது தாரிக், புல்லுக்காடு ஹவுசிங்யூனிட்டைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்தனர். இதேபோல அவர்கள் மூன்று முறை திருடி, பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. திருட்டுபோன கட்டுமானப் பொருட்களின் மொத்த மதிப்பு 7 லட்சம் ரூபாய் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...