கோவை: இன்னும் 2 வாரங்கள் கோவையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவும் என வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக குளிரின் தாக்கம் குறைந்து கோடை வெப்பம் ஆரம்பிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால் கோவையில் மட்டும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ்கிருஷ்ணன் கூறியதாவது:-
கடல்சார்ந்த அலை நம் பகுதிக்கு வராத காரணத்தால், கடந்த இரு வாரங்களாக, கோவையில் வறண்ட வானிலை நிலவியது. இன்னும் இரு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே தொடரும். வரும் நாட்களில், வட மாநிலங்களில் உயர் அழுத்தத்தில் இருந்து வரும் குளிர்ந்த வறண்ட காற்று, தமிழக நிலப்பரப்பில் ஊடுருவி, இரவு நேரங்களில் குளிர்ந்த காலநிலை உருவாக்கும். இன்னும் இரண்டு வாரத்துக்கு கோவை மற்றும் வட மாவட்டங்களில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு இருக்கும். மார்ச் மாதம் அடுத்த சுற்று மழையை எதிர்பார்க்கலாம்.
கிழக்கு மற்றும் மேற்கு காற்றில் முறிவு ஏற்பட்டு, கேரளா மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களுக்கு, வெப்பச்சலன மழை இந்த வருடம் முன் கூட்டியே, துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.