ஆதார், அட்டையில் ஊர் பெயர் மாற்ற கோவை கலெக்டரிடம் பழங்குடி மக்கள் மனு!

கோவை: ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளில் காருண்யா நகர் என உள்ள பெயரை நல்லூர் வயல் என மாற்றித் தரும்படி பழங்குடி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


கோவை: ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளில் காருண்யா நகர் என உள்ள பெயரை நல்லூர் வயல் என மாற்றித் தரும்படி பழங்குடி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.



கோவை மத்வராயபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கலெக்டரைச் சந்தித்து கொடுத்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம், மத்வராயபுரம் ஊராட்சி, நல்லுார் வயல் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறோம். 1986-ம் ஆண்டு காருண்யா கல்லுாரி நல்லுார்வயலில் செயல்படதுவங்கியது. அப்போது அந்த இடம் மட்டும், காருண்யா நகர் என்ற ஒரு தெருவாக இருந்தது. தற்போதும், அரசு இதழ்களில் அவ்வாறே உள்ளது. ஆனால், காருண்யா நிர்வாகம் தனது அதிகார பலத்தால், சிறிது சிறிதாக எங்கள் ஊரின் அடையாளமான பாரம்பரிய பெயரை மாற்றத்துவங்கினர்.



1992ம் ஆண்டு மத்திய அரசின் கீழ் செயல்படும் தபால் நிலையம், காருண்யா நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நல்லுார்வயல் என்ற கிராமத்தின் பெயரையே காருண்யா நகர் என்று மாற்றினர். கிராம மக்களின் ஆதார், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை அனைத்திலும் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கி, அரசு போக்குவரத்து துறை அலுவலகம், பி.எஸ்.என்.எல்., போலீஸ் ஸ்டேஷன், தற்போது அமையவுள்ள மின்சார வாரியத்துக்கும் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் எங்கள் கிராமத்தின் அடையாளத்தை இழந்துவிட்டோம். எனவே, பாரம்பரிய பெயரான நல்லுார்வயல் என்பதை அனைத்து இடங்களிலும் குறிப்பிடுவதுடன், அனைத்து அரசு அடையாளஅட்டைகளிலும் பெயர் மாற்றம் செய்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...