கோவை: கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற கைதி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

ஈரோடு மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்தவர் எபிநேசர் துரைராஜ் (வயது 47). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவருக்கு திருப்பூர் விரைவு கோர்ட்டில் ஆயுள்சிறை விதிக்கப்பட்டது.
இதையடுத்து கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த எபிநேசர், நேற்று திடீரென மயங்கி விழுந்தார். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். உடல்நலக்குறைவால் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.