சசிகலாவுக்கு அ.தி.மு.க. கொடி கட்டப்பட்ட கார் வழங்கிய அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 7 பேர் நீக்கம்!

கோவை: பெங்களூரிலிருந்து தமிழகம் வந்த சசிகலாவுக்கு அ.தி.மு.க. கொடி கட்டப்பட்ட கார் வழங்கிய அ.தி.மு.க. நிர்வாகி உள்பட ஏழு பேர் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.


கோவை: பெங்களூரிலிருந்து தமிழகம் வந்த சசிகலாவுக்கு அ.தி.மு.க. கொடி கட்டப்பட்ட கார் வழங்கியஅ.தி.மு.க. நிர்வாகி உள்பட ஏழு பேர் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து சசிகலா நேற்று தமிழகம் வந்தார். அவரது காரில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்ததால் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அ.தி.மு.க. கொடியை காரில் பயன்படுத்தக்கூடாது என்று கூறி போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து சசிகலா தனது காரில் இருந்த கொடியை அகற்றிவிட்டு வேறொரு காரில் அ.தி.மு.க. கொடி கட்டியபடி பயணம் செய்தார். அ.தி.மு.க. கொடி கட்டப்பட்ட அந்த கார்கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கியின் கார் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்துசசிகலாவுக்கு அ.தி.மு.க. கொடி கட்டப்பட்ட கார் வழங்கியகிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கி, சசிகலாவுக்கு வரவேற்பு அளித்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் தட்சணாமூர்த்தி, ஒன்றிய விவசாயப் பிரிவு செயலர் சந்திரசேகரரெட்டி, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜானகிரவீந்திரரெட்டி, கொம்மேப்பள்ளி ஊராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த்குமார், ஒன்றிய இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் நாகராஜ், சூளகிரி மேற்கு ஒன்றியம் சங்கிரிப்பள்ளி ஆனந்த் ஆகியோர் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...