கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நாயக்கன் பாளையத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து(40) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர் மேன் ஆக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று நாயக்கன் பாளையம் கிராமத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், உயிரிழந்த பேச்சிமுத்துவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.