கோவை: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்யாணராமனின் ஜாமீன் மனு கோவை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி மனுவை 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பாரதிய ஜனதா நிர்வாகி கல்யாணராமன் முகமது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்யாணராமன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே கல்யாணராமன் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணராமன் ஜாமீன் மனுவை 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.