பொள்ளாச்சி அருகே குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கை அப்புறப்படுத்த கோரி சார் ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

கோவை: பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் ஊராட்சியில் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கை அப்புறப்படுத்தக் கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் ஊராட்சியில் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கை அப்புறப்படுத்தக் கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, குடியிருப்புகள் மிகுந்த சின்னாம்பாளையம் ஊராட்சியில் 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், புதிதாக அமைக்கப்படும் குப்பை கிடங்கிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சின்னாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 6வது வார்டு குடியிருப்பு பகுதியில் உள்ள, பார்க் சைட்டில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பிரிவு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மீண்டும் அந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து அங்கு பணியாற்றும் நபர்களிடம் கேட்டபோது, ஆட்சியர் மற்றும் அரசின் உத்தரவுப்படி பணி செய்வதாக கூறியுள்ளனர். எனவே, அதிகாரிகள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...