சூரிய ஒளி, மின்சாரம், பெடலிங் முறையில் இயங்கும் `த்ரீ இன் ஒன்' சைக்கிள்: கோவை கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு!

கோவை: கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூரிய ஒளி, மின்சாரம் மற்றும் பெடலிங் முறையில் இயங்கும் 'த்ரீ இன் ஒன்' சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.


கோவை: கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூரிய ஒளி, மின்சாரம் மற்றும் பெடலிங் முறையில் இயங்கும் 'த்ரீ இன் ஒன்' சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.

சைக்கிளை கண்டுபிடித்த மாணவர் பரத்குமார் 'சிம்பிளிசிட்டி'க்கு அளித்த சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது பெயர் பரத்குமார். கோவையில் உள்ள பி.எஸ்.ஜி, கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறேன். அப்பா மேஸ்திரி, அம்மா ஹவுஸ் வொய்ஃப், ஒரு சகோதரி உள்ளார்.

மக்களுக்கு பயனுள்ள புதுமையான தயாரிப்புகளைக் கண்டுபிடிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. இப்போது நான் `த்ரீ இன் ஒன்' சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளேன், இந்த சைக்கிளை சூரிய ஒளி, பேட்டரி மற்றும் பெடலிங் என மூன்று வழிகளைப் பயன்படுத்தி இயக்க முடியும். தற்போது சந்தைகளில் ஒன்று அல்லது இரண்டு வகையான முறைகளைப் பயன்படுத்தி இயக்கப்படும் சைக்கிள்கள்மட்டுமே உள்ளன. எனவே மூன்று வழிகளிலும் இயங்கும் ஒரு புதுமையான தயாரிப்பைக் கண்டுபிடிக்க முடிவு செய்தேன். இதற்காகபழைய சைக்கிள் ஸ்கிராப்பை சேகரித்து அவற்றின்மூலம் இந்த சைக்கிளை தயாரித்தேன்.

இந்த சைக்கிளை சூரிய ஒளி, பேட்டரி அல்லது பெடலிங் முறையில் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் சைக்கிளை மிதித்து இயக்குவதன்மூலமும், சூரிய ஒளியைப் பயன்படுத்துவதன்மூலமும் பேட்டரி சார்ஜ் ஆகும். இப்படிப்பட்ட சைக்கிளை நான் எம்.எஸ்.எம்.இ-யில் பதிவு செய்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை இந்த `த்ரீ இன் ஒன்' சைக்கிளை மலிவு விலையில் வழங்குவதே எனது நோக்கமாகும். தற்போது காற்று மாசு மற்றும் ஒலி மாசுபாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சைக்கிளைப் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் நான் கண்டுபிடித்துள்ள எனது இந்த முயற்சிக்கு நிறுவனங்கள் ஆதரவளிக்க முன்வந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த `த்ரீ இன் ஒன்' சைக்கிள் விலை மிகவும் விலை குறைவாக இருக்கும், எனவே அனைத்து மக்களும் அதை வாங்க முடியும்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...