கோவையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கஞ்சா வியாபாரி உயிரிழப்பு: கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ வைரல்!

கோவை: கோவையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கஞ்சா வியாபாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.


கோவை: கோவையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கஞ்சா வியாபாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கோவை ரத்தினபுரி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் . 23 வயதான இவர்எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி இரவு 11 மணியளவில் மணிகண்டன் வீட்டுக்குச் சென்ற 4 பேர் தங்களை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் கஞ்சா வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி மணிகண்டனை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் மறுநாள் (26-ம் தேதி) காலை மணிகண்டனின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையம் சென்றபோது, தாங்கள் யாரையும் விசாரணைக்கு அழைத்து வரவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் பலத்த காயங்களுடன் மணிகண்டன் கிடந்தார். அவரை மீட்ட மேட்டுப்பாளையம் போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு மாற்றப்பட்ட மணிகண்டன் உயிரிழந்தார். மணிகண்டன் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...