கோவை: தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமை இன்று மாலை அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
கோவை: தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமை இன்று மாலை அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகள் புத்துணர்வு பெறும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அதன்பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடந்து வந்தது.
இந்த நிலையில் 13-வது ஆண்டாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இன்று தொடங்கி 48 நாட்கள் நடக்கிறது. முகாம் தொடக்க நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சேவூர்ராமசந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்கின்றனர்.
நேற்று காலை முதல் முகாமிற்கு யானைகள் வரத்தொடங்கின.முகாமிற்கு வருகை தரும் யானைகளின் உடல் எடையைக் கண்டறிவதற்காக மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோடு பிரிவு அருகே தனியார் எடை மேடை ஏற்பாடு செய்யப்பட்டது. லாரிகளில் இருந்து கீழே இறங்கிய யானைகள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் கொடிமரம் முன்பு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. யானைகள் துதிக்கையை உயர்த்தி அம்மனை வணங்கிய பின்னர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இந்த காட்சியை பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். யானைகள் வரும் வழிநெடுகிலும் அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் ரோடுகளில் நின்று யானைகளை கண்டு ரசித்தனர்.
முகாமுக்கு வந்த 26 யானைகளின் விவரம் வருமாறு:-
1. கோதை, அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோயில், ஶ்ரீ பெரும்புதூர்.
2. லட்சுமி, அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் இணைந்த அருள்மிகு ராமர் திருக்கோயில், படவேடு, போளூர் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.
3. பூமா, அருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில் உப்பிலியப்பன் கோயில்.
4. செங்கமலம், அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி.
5. ஆண்டாள், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஶ்ரீரங்கம்.
6. பிரேமி, அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஶ்ரீரங்கம்.
7. லெட்சுமி, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருச்சி.
8. அகிலா, அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல்.
9. பார்வதி, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை.
10. சுந்தரவள்ளி தாயார், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோயில்.
11. கஸ்தூரி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், பழனி.
12. தெய்வானை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம்.
13. ராமலட்சுமி, அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில். ராமேஸ்வரம்.
14. சொர்ணவள்ளி, அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார்கோயில், சிவகங்கை.
15. ஜெயமால்யதா, அருள்மிகு நாச்சியார் திருக்கோயில், ஶ்ரீவில்லிபுத்தூர்.
16. கல்யாணி, அருள்மிகு பட்டீஸ்வரசுவாமி திருக்கோயில், பேரூர்.
17. கோமதி, அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில்.
18. காந்திமதி, அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி.
19. ஆதிநாயகி, அருள்மிகு ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர்.
20. குமுதவள்ளி, அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், திருக்கோளூர், திருச்செந்தூர்,
21. லட்சுமி, அருள்மிகு அரவிந்தலோச்சனார் திருக்கோயில் இரட்டைத்திருப்பதி, ஶ்ரீ வைகுண்டம்.
திருமடங்களில் உள்ள யானைகளின் விவரம் வருமாறு:-
1. அபயாம்பிகை, அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோயில் மயிலாடுதுறை நகர் மற்றும் (திருவாடுதுறை ஆதினம்).
2. சுந்தரவள்ளி, அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி (திருஜீயர் மடம்).
3. குறுங்குடிவள்ளி, அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி (திருஜீயர் மடம்).
புதுச்சேரி மாநிலத்திலுள்ள யானைகளின் விவரம் வருமாறு:-
1. லட்சுமி, அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரி.
2. பிருக்குருதி, அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு.