பொள்ளாச்சி: தி.மு.க.தலைவர் ஸ்டாலினின் அறிவிப்பைக் கண்டு பயந்து முதல்வர் பழனிசாமி பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளார் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, ஏராளமான இளைஞர்கள் மாற்று கட்சிகளிலிருந்து விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மடத்துக்குளம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விலகி தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பெ, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதைக் கண்டு பயந்து போன எடப்பாடி பழனிசாமி, மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க முடியாமல், தற்போது இந்த விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் நிலைப்பாடு இல்லாமல் உள்ளனர். யாரை வேண்டுமென்றாலும் தலைவராக ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் சசிகலாவின் நேரடி தேர்வு மூலம் களத்திற்கு வந்தவர்கள். அவர்களின் நிலைப்பாடு என்னவென்பது வரும் நாட்களில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.