கோவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடம் முறைகேடாக விற்பனை: கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம், 300 பேர் கைது!

கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடத்தை குறைந்த விலைக்கு முறைகேடாக விற்பனை செய்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடத்தை குறைந்த விலைக்கு முறைகேடாக விற்பனை செய்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த 300-க்கும் மேற்பட்டதி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடத்தை குறைந்த விலைக்கு முறைகேடாக விற்பனை செய்த அ.தி.மு.க. அரசு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்து கோவை குளத்துப்பாளையத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங்காததால், 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். சுகுணாபுரம் பகுதி தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் பேசினார். அப்போது அவர் இ-டெண்டர் மூலம் வீட்டுவசதி வாரிய வீடுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து முறைகேட்டில் வேலுமணி ஈடுபட்டுள்ளார்.



இதேபோல், சூயஸ் நிறுவனத்துக்கு குடிநீர் விநியோகத்தை கொடுத்துவிட்டு சிறுவாணி தண்ணீர் மக்களுக்கு வழங்காமல் ஏமாற்றுகின்றனர். இதில், பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று கூறினார்.



ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.



காவல்துறை அனுமதியை மீறி தி.மு.க.வினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...