மருதமலை முருகன் கோயில் படிக்கட்டில் யானைகள் முகாம்: 1.30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு விரட்டியடிப்பு!

கோவை: மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் காட்டு யானைகள் திடீரென குடும்பம் சகிதமாக வந்து முகாமிட்டு சுற்றித் திரிந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயந்து ஓடினர். 1.30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு விரட்டியடிக்கப்பட்டது.


கோவை: மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் காட்டு யானைகள் திடீரென குடும்பம் சகிதமாக வந்து முகாமிட்டு சுற்றித் திரிந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயந்து ஓடினர். 1.30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு விரட்டியடிக்கப்பட்டது.

மருதமலை படிக்கட்டு ஓரம் நேற்று திடீரென காட்டு யானைகள் முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு பெண் யானைகள் மற்றும் ஒரு குட்டியுடன் காட்டு யானைகள், படிக்கட்டு பகுதிக்கு வந்துள்ளன. அப்போது அந்த வழியாகச் சென்ற பக்தர்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறையினர், அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் வருவதைத் தடுத்து நிறுத்தினர். அதன்பின், காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். படிக்கட்டு மற்றும் சாலைப் பகுதிக்கு இடையிலான பள்ளத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன. சுமார் 1.30 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள், வனத்துறையினர் விரட்டினர்.

கோடைக்காலம் துவங்கி உள்ளதால், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பக்தர்கள், படிக்கட்டுகள் மற்றும் சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், கடை வைத்துள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலையடிவாரப் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து இப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...