சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னை வந்துகொண்டிருக்கும் சசிகலாவுக்கு வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சென்னையை நெருங்க நெருங்க பதட்டமும் பரபரப்பும் நீடித்துள்ளது.

ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சசிகலா பேரணியாக வர வாய்ப்பு உள்ளது என்ற தகவல், சமூக வலை தளங்களில் நேற்று பரவியது. இதையடுத்து, அரசு உத்தரவுப்படி, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் போலீசார் புடைசூழ, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் செல்ல பயன்படுத்தப்படும், அவ்வை சண்முகம் சாலையின் இருமுனைகளிலும், யாரும் நுழையாத வண்ணம், போலீசார் தடுப்புகளை வைத்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து ஓசூர் வழியாக, சென்னை வந்துகொண்டிருக்கும் சசிகலாவுக்கு, செம்பரம்பாக்கம் முதல் தி.நகர் வரை, மொத்தம், 32 இடங்களில், அ.ம.மு.க.,வினர் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், பேரணி, வரவேற்பு அளிக்க, போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனிடையே, சென்னையில் சசிகலாவுக்கு ஆதரவாக, அனுமதியின்றி பேனர்கள் வைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
சென்னையை நோக்கி சசிகலா
இந்த நிலையில் இன்று காலை புறப்பட்ட சசிகலா, நூற்றுக்கணக்கான கார்கள் புடைசூழ சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். ஆங்காங்கே அமமுகவினர் கொடிகள் தோரணங்கள் வாழை தோரணங்கள், பேனர்கள் வைத்து உற்சாக வரவேற்பு அளித்து கொண்டிருக்கின்றனர். அவர் சென்னையை நெருங்க நெருங்க பதட்டமும் பரபரப்பும் நீடித்துள்ளது.
இவர் சென்னைக்குள் நுழைந்தவுடன் முதலில் சென்னை நுழைவாயில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவர் நேரடியாகச் சென்று அம்மாவின் சமாதியில் அஞ்சலி செலுத்துவார் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிக்கு செல்வார் என்றும், அதன்பிறகு அவர் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு செல்வார் என கூறப்படுவதால், டி.ஜி.பி தலைமையில் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் ஜெ நினைவிடம் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, இன்று சென்னை வரும் சசிகலா, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதை தடுக்க, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதேபோல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வீடு மற்றும் மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, ஜனவரி, 27ல், விடுதலையானார். கொரோனா தொற்று காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஜன., 31ல், 'டிஸ்சார்ஜ்' ஆன சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரில், அ.தி.மு.க., கொடி கட்டி வெளியே வந்தார்.
புகார் மனு.
அதிமுக கொடியை பயன்படுத்த தடை

அ.தி.மு.க., கொடியை சசிகலா பயன்படுத்தியது, சட்ட விரோத செயல் என, டி.ஜி.பி.,யிடம், அ.தி.மு.க., அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம் போன்றவர்கள் புகார் மனு அளித்து உள்ளனர். சசிகலாவுக்கு, அ.ம.மு.க.,வினர் கொடுக்கும் உற்சாக வரவேற்பு வாயிலாக, சட்டம் - ஒழுங்கை பாதிக்கும், கலவரத்திற்கு திட்டமிடுவதாகவும், சசிகலா, தினகரன் ஆகியோர் மீது நேற்று முன்தினம், அமைச்சர்கள் குற்றம் சாட்டினர்.
அதே போல, அரசுடமையாக்கப்பட்ட, ஜெ., வீடு அமைந்த போயஸ்கார்டன் பகுதி, பின்னி சாலை, மெரினா கடற்ரையில் உள்ள ஜெ., நினைவிடம் போன்றவற்றுக்கும், சசிகலா செல்லாமல் இருக்க, போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெ., நினைவிடத்தில், அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடப்பதால், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கும் சசிகலா செல்ல வாய்ப்பு இல்லை.