கோவை: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்குமுன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கோவை எம்.பி., பி.ஆர் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கோவை எம்.பி., பி.ஆர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதியக் கல்விக் கொள்கையை ஒருதலைப்பட்சமாகத் திணித்துள்ள மத்திய அமைச்சரவையின் முடிவைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். அதேபோல் மத்திய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றியிருப்பதையும் கண்டிக்கிறேன்.
கல்வி நம் அரசமைப்புச்சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருக்கிறது. இவ்வாறுள்ள நிலையில் மத்திய அரசு பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்புகளையும், ஆட்சேபனைகளையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒருதலைப்பட்சமாக புதிய கல்விக் கொள்கையைத் திணித்திருப்பது அரசமைப்புச்சட்டத்தின் விதிகளை ஒட்டுமொத்தமாக மீறிய செயலாகும்.
இத்தகைய புதிய கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு நாடாளுமன்றத்தில் விவாதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசுத்தரப்பில் உத்தவாதம் முன்பு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும், திருத்தங்களையும் அளித்திடலாம் என்றும் கூறப்பட்டது. எனினும் நாடாளுமன்றம் முழுமையாக ஓரங்கட்டப்பட்டிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையின் வரைவு பொதுவெளியில் வெளியிடப்பட்டு அதன்மீது கருத்துகள் கோரப்பட்டிருந்தன. குறிப்பாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்தும் கருத்துகள் கோரப்பட்டிருந்தன. மேலும், இதுதொடர்பாக அறிவுஜீவிகள் பலர் தங்கள் கருத்துகளை அரசுக்கு அனுப்பியிருந்தனர். இவை எதுவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இத்தகைய அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதியக் கல்விக்கொள்கையானது பெரிய அளவில் மத்தியத்துவம், வணிகமயம் மற்றும் தகவல் தொடர்பைக் கோருவதால் இது நாட்டின் கல்வி அமைப்புமுறையையே அழித்துவிடும். எனவே நான் மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக என்னுடைய வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன். இப்புதியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்கிற என் வேண்டுகோளை மீளவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.