தேமுதிக வாக்கு சதவீதம் குறையவில்லை; கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது -பொள்ளாச்சியில் விஜயபிரபாகரன்.

தேமுதிக வாக்கு சதவீதம் குறையவில்லை; கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது -பொள்ளாச்சியில் விஜயபிரபாகரன்.


கோவை: கோவை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் 2021 தேர்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்பொள்ளாச்சி - பல்லடம் சாலையில்உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது நேற்று நடைபெற்றது.

தேமுதிக மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறையவில்லை என்றும், அரசியலில் தோல்வி நிரந்தரம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், சூழல் மாறும் பொழுது தேமுதிக மாபெரும் இயக்கமாக திகழும் எனவும் அதிமுக-திமுக கூட்டணியை பொருத்தவரை பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, எனவும்

இதுகுறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும், என்றார்.



அதிமுக ஆட்சியில் நிறையும் உள்ளது, குறையும் உள்ளது எனவும், தற்போது விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார். பின்னர், மேடையில் பேசும்போது தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது, தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...