நாளை சசிகலா தமிழகம் வருகை: மேளதாளம் முழங்க வரவேற்பளிக்க காத்திருக்கும் அமமுக தொண்டர்கள்..!

நாளை சசிகலா தமிழகம் வருகை: மேளதாளம் முழங்க வரவேற்பளிக்க காத்திருக்கும் அமமுக தொண்டர்கள்..!


சென்னை:

நாளை தமிழகம் திரும்பும் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க அலுவலகம், ஜெயலலிதா சமாதியில் காவல்துறை பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவை வரவேற்க சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூருலிருந்து, சென்னைக்கு வரும் சசிகலாவிற்கு, வழிநெடுக 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை வரவிருக்கும் சசிகலாவை அழைத்து வர, அமமுக பொதுசெயலாளர் தினகரன், அமமுக நிர்வாகி பழனியப்பன் உள்ளிட்டோர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.

சென்னையின் முக்கிய வழித்தடங்களில் குறிப்பாக போரூர், கிண்டி, கத்திப்பாரா, தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை சசிகலா சென்னை வரும் போது பெரிய அளவில் அமமுகவினர் திரள்வார்கள் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையே, அதிமுக அலுவலகம் உள்ள அவ்வை சண்முகம் சாலை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சமாதி உள்ளிட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...