கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள ஜீவா நகர் பகுதியில் ரூ. 7.32 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் மேற்கு மண்டலம் வார்டு எண் 8 ஜீவா நகர் பகுதியில் ரூ. 7.32 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.