கோவையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய இந்து முன்னணி பிரமுகர் ஜெய்சங்கர் கைது!

கோவை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிந்து போலீசாரால் தேடப்பட்டு வந்த இந்து முன்னணி பொதுச் செயலாளர் ஜெய்சங்கரை சிங்காநல்லூர் போலீசார் இன்றுகைது செய்தனர்.


கோவை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிந்து போலீசாரால் தேடப்பட்டு வந்த இந்து முன்னணி பொதுச் செயலாளர் ஜெய்சங்கரை சிங்காநல்லூர் போலீசார் இன்றுகைது செய்தனர்.

கோவையில் கடந்த 1-ஆம் தேதி மாலை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே பா.ஜ.க. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் கல்யாணராமன் பேசியதை சுட்டிக்காட்டி பேசினார்.

இதைத்தொடர்ந்து நபிகள்நாயகம் குறித்து ஜெய்சங்கர் அவதூறாக பேசியதாகக்கூறி இஸ்லாமிய அமைப்புகள் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஜெய்சங்கரை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத்தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை ஜெய்சங்கரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டதையடுத்து இந்து முன்னணியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...