பொள்ளாச்சி: நெகமம் அருகே, கணவர் இறந்த துக்கம் தாளாமல் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

நெகமத்தை அடுத்த பெரியகளந்தை வடக்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. 94 வயதாகும் இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 3-ம் தேதி மரணமடைந்தார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் இவரது மனைவிசுப்பாத்தாள் (வயது 80) என்பவர் 4-ம் தேதி அங்குள்ள தோட்டத்துக் கிணற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது.
அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே சுப்பாத்தாள் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.