ஒரு லட்சம் தேங்காய்களை அனுப்பி டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்துவோம்: திருப்பூரில் நல்லாக்கவுண்டர் அறிவிப்பு!

திருப்பூர்: ஒரு லட்சம் தேங்காய்களை அனுப்பி டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று திருப்பூரில் நல்லாக்கவுண்டர் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: ஒரு லட்சம் தேங்காய்களை அனுப்பி டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று திருப்பூரில் நல்லாக்கவுண்டர் அறிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லாக் கவுண்டர் திருப்பூரில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டரை மாத காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தை சிதைக்கும்நோக்கில், டிராக்டர் பேரணியில் மோடி அரசே வன்முறையாளர்களை ஏவி விட்டு, விவசாயிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு மற்ற மாநில விவசாயிகளிடம் ஆதரவு இல்லை என்று சொல்வது தவறான பிரச்சாரம்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், ஒவ்வொரு தோட்டத்தில் இருந்தும் 10 தேங்காய்கள் வீதம், ஒரு லட்சம் தேங்காய்களை அனுப்பி டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்த தீர்மானித்துள்ளோம். ஒருவார காலத்துக்குள் இதைச் செய்ய உள்ளோம். தற்போது கோவை, திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் தேங்காய் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

டெல்லியில் நெல்,கோதுமை மற்றும் காய்கறிகள் விளைகின்றன. ஆனால் தேங்காய் விளைச்சல் இல்லை. ஆகவே தமிழக விவசாயிகளின் பங்களிப்பாக தேங்காய்களை, மிக பிரமாண்டமாக நடத்த உள்ளோம். இதையடுத்து தமிழகத்தில் இருந்து 100 பேர் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், தலைவர் சண்முகசுந்தரம், அமைப்புச் செயலாளர் பழ.ரகுபதி உள்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...