கோவை: விளாங்குறிச்சி பகுதியில் ரூ.2 கோடியே 9 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வளர்ச்சிப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை: விளாங்குறிச்சி பகுதியில் ரூ.2 கோடியே 9 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வளர்ச்சிப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சா் எஸ்.பி.வேலுமணிதிறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் கிழக்கு மண்டலம் வார்டு எண் 32-க்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் ரூ.131.5 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இதேபோல் சரவணம்பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மற்றும் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.63.30 லட்சம் மொத்தம் ரூ.78.30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது. ஆக மொத்தம் ரூ.2 கோடியே 9 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வளர்ச்சிப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், வடக்கு சட்டமன்ற உறுப்பினா் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, மண்டல உதவி ஆணையாளர்கள் முருகன் (கிழக்கு), செந்தில்குமார் ரத்தினம் (வடக்கு), மாநகரப் பொறியாளர் ஆர்.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.