கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் மந்தம்: போக்குவரத்து மாற்றத்தால் எந்த பயனும் இல்லை, நெருங்கடியால் சிக்கி தவிப்பதாக வாகன ஒட்டிகள் புகார்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி திருமண மண்டபம் வரை 1.20 கிலோ மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.66 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் ஜி.என்.மில் சந்திப்பில் 0.60 கிலோ மீட்டர் நீளம், 17.20 கிலோ மீட்டர் அகலத்தில் ரூ.41.88 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்து மாற்றம்
இந்தப் பாலப் பணிகளால், மேட்டுப்பாளையம் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள், கார்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

நீடிக்கும் நெருக்கடி
இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக மாற்றுப் பாதைகளான வெள்ளக்கிணர் பிரிவு, துடியலூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதனிடையே, போக்குவரத்து மாற்றம் செய்த பின்பும் கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் மந்த கதியில் தான் நடந்து வருகிறது. இதனிடையே, மாற்று பாதையில் செல்வதால் அங்கேயும் போக்குவரத்து நெரிசல், 10 கி.லோ மீட்டர் தூரம் வரை சுற்றி வருவது, மாற்று பகுதி சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பது போன்ற காரணங்களால் மக்கள் கூடுதல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மந்த நிலையில் பணிகள்
இதுகுறித்து வாகன ஒட்டிகள் கூறுகையில், ‘‘மேம்பாலப் பணிகளுக்காக சாலைகள் முற்றிலும் உடைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி உள்ளது. ஆனால், சாலை முற்றிலும் சேதமாகி உள்ளதால் புழுதி பறக்கிறது. குழிகளில் வாகனங்கள் சிக்கி கொள்கின்றன. மிகவும் அலட்சியாக பணிகள் நடக்கிறது. உடைக்கப்பட்ட சாலைகளாவது சீரமைக்க வேண்டும். அதே போல் மாற்று பாதையில் எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாததால் அப்பகுதி சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளன,’’ என்றனர்.

மாற்று பாதையில் சிக்கல்..!
இதனிடையே கோவை தடாகம் சாலை வழியாக இந்த போக்குவரத்து மாற்றத்தினால் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், தடாகம் சாலையில் வெங்கிட்டாபுரம் பகுதியில் துவங்கி இடையர்பாளையம் வரை பாதாள சாக்கடை பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக தார் சாலைகள் அண்மையில் தோண்டப்பட்டது. அதன் பின் அவசர அவசரமாக மீண்டும் சீரமைக்கப்பட்ட சாலையில் பாதாள சாக்கடை திறக்கும் மற்றும் மூடும் பகுதி உயரமாக உள்ளது. பல்வேறு இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் சிறு, சிறு விபத்து நடந்து வருகிறது.
இடையர்பாளையம் பகுதியில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலையை அவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாது தொழில்முனைவோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டாக்ட் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் அந்த சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனமும் தடாகம் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்லுவதால் இரு சக்கர வாகண ஓட்டிகளும், பகுதி வாழ் மக்களும் அச்சத்துடன் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இருசக்கரத்தில் செல்லும் பலரும் சாலைகள் சரி இல்லாததால் தவறி விழுவதும், காயங்களுடன் செல்லுவதும் அதிகரித்து வருகிறது. உடனடியாக, வெங்கிட்டாபுரத்தில் இருந்து இடையார்பாளையம் வரை சாலைகளை சமப்படுத்தவும், விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்படுவதை தடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.