திருப்பூர்: விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று கூறியுள்ளதால் அச்சம் தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் துவக்கப் பள்ளியை தரம் உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்ட நிலையில் அதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், `கடன் தள்ளுபடி போன்ற விஷயங்கள் விவசாயிகள் நலன் கருதி தேர்தல் நேரங்களில் மட்டும்தான் அறிவிப்பது வழக்கம், ஆனால் சட்டமன்றத்திலேயே முதல்வர்அதை அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு என்பது இந்தியாவே வியந்த ஒன்றாகும். வறட்சி நிலங்களில் குடிமராமத்துப் பணிகள், அத்திக்கடவு அவிநாசி போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது' என்றார். அப்போது அவரிடம், சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்றுஏற்படுவது குறித்த கேள்விக்கு, `பள்ளிகள் நடைபெற வேண்டும், மாணவர்களின் கல்வி சிறக்க வேண்டும். அதேநேரத்தில் விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று கூறியுள்ளதால் அச்சம் தேவையில்லை' என்று கூறினார்.