திருப்பூர்: காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூரில் நாளை நடக்கும் 'மரம் நட விரும்பு' நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரம் நடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மண்ணின் வளத்தையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக மரம் சார்ந்த விவசாயத்தை காவேரி கூக்குரல் இயக்கம் ஊக்குவித்து வருகிறது. இம்முயற்சி தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் தங்கள் நிலங்களில் மதிப்புமிக்க மரங்கள் நடும் பணியை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.
இப்பணியில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாகவும் `மரம் நட விரும்பு' என்ற நிகழ்ச்சி வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா, இச்சப்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயி சிவசாமி நிலத்தில் மரம் நடும் பணி வரும் நாளை நடைபெற உள்ளது. 9 ஏக்கர் பரப்பில் நடக்கும் இப்பணியில் சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரம் நடலாம். விருப்பம் உள்ளவர்கள் 94425 90016 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.