கோவை: கோவையில் நேற்று மாலை வணிகவரித்துறை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கருத்து கேட்பின்போது, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டம் தொடர்பாக பட்டயக் கணக்காளர்கள், வணிகப்பிரதிநிதிகள், வரி ஆலோசகர்களுடனான கூட்டம் கோவை வணிக வரித்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, வணிக வரித்துறை கூடுதல் கமிஷனர் பழனி பேசியதாவது:-
வரி ஏய்ப்பை குறைப்பதில் ஜி.எஸ்.டி. முக்கியப்பங்கு வகிக்கிறது. இறக்குமதி மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் நமது உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்துவதும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. வரி விதிப்பு முறையை நிர்வகிக்கும் பணியும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பெறப்படும் கருத்துகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வரியில் மாற்றம் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான ஐ.டி.சி., வரவு, மாநிலங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிப்பது தொடர்பான கருத்துகள் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பரிந்துரைக்கப்படும். அதேபோல், ரத்து செய்யப்பட்ட பதிவுச் சான்றினை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட கருத்துக்கள் அரசிடம் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.