கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான அடர்ந்த வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் முழுமையாக எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் ஓடந்துறை கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் நேற்றிரவு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று எரிந்து நிலையில் கிடப்பதாகக் கூறினார். இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் சம்ஸ் போர்டு என்ற தனியாருக்குச் சொந்தமான கல்லாறு சோதனைச்சாவடி அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கிடந்த அந்த ஆண் சடலத்தைப் பார்த்தனர்.
ஒரு காலைத் தவிர உடல் முழுவதும் முழுமையாக தீயில் கருகிப் போயிருந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார்மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று விசாரணையை துவங்கியுள்ளனர்.
காட்டுப்பகுதிக்குள் தீயில் எரிந்து பிணமாகக் கிடந்தவர் யார்? அவரை திட்டமிட்டு யாரும் எரித்துக் கொலை செய்தார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கள்ளக்காதல் விவகாரமா? சொத்து தகராறா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எரிந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.