கோவை: கோவையைச் சுற்றியுள்ள கோயில்களில் குழந்தைத் திருமணம் நடப்பதாக வந்த தகவலையடுத்து வயது சான்றிதழைக் கோயில் நிர்வாகம் சரிபார்த்த பிறகே திருமணத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என அறநிலையத்துறையை சமூக நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் குழந்தைத் திருமணத்தை தடுக்க சமூகநலத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

குழந்தைத் திருமண தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் வயது சான்றிதழை கட்டாயம் ஆய்வு செய்ய, அறநிலையத்துறைக்கு சமூக நலத்துறை பரிந்துரை செய்துள்ளது. கோவையில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. பஞ்சாயத்து அளவில் குழுக்கள் அமைத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக தை மாதம் அதிக குழந்தை திருமணங்கள் சார்ந்த புகார்கள் வரும் சூழலில் நடப்பாண்டில் 3 புகார்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் அவை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தை திருமணங்கள் எளிய முறையில், கோயில்களில் நடத்தப்படுவதாக சமூகநலத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, கோயில்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கண்காணிப்புப் பணிகளிலும் சமூக நலத்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமூகநலத்துறை அதிகாரி தங்கமணி கூறுகையில், 'கோவையில் குழந்தை திருமணம் குறித்து, நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பஞ்சாயத்து அளவில் குழுக்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கோயில்களில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதைத் தடுக்க, அறநிலையத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கோயில்களில் குழந்தைத் திருமணம் நடத்தமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றவும், வயது சான்றிதழ் குறித்து ஆய்வு செய்து, அதன்பின்னரே திருமணத்துக்கு அனுமதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என்றார்.