கோவை: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பதற்றத்தை உருவாக்கும் யானையைப் பிடிக்க 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பந்தலுாரில் சுற்றி வரும் ஒற்றைக் கொம்பன் யானையை பிடிக்க ஐந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், சேரம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் மூன்று பேரை ஒற்றைக் கொம்பன் யானை தாக்கிக் கொன்றது. இந்த யானையைப் பிடிப்பதற்காக நடவடிக்கை எடுத்தபோது, கேரள வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது, மீண்டும் சேரம்பாடி பகுதிக்கு வந்துள்ளதால் யானையைப் பிடிக்கும் பணி துவக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் யானைகளைப் பிடிக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்ட உதவி வனப் பாதுகாவலர்கள் தினேஷ் மற்றும் ராஜேஷ் தலைமையிலான 11 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மண்டல முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் கூறும்போது, `மொத்தம் ஐந்து கும்கி யானைகள் உதவியுடன் யானையைப் பிடிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகு வரும் 7-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி, யானையைப் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும். மக்கள் அச்சப்படத் தேவையில்லை' என்றார்.