கோவையில் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற தி.மு.க.வினர் 100 பேர் குண்டு கட்டாக கைது

கோவை: திமுக எம்எல்ஏ வுக்கு அரசு விழாவில் அழைப்பு வழங்காததை கண்டித்து, இன்று காலை அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற திமுகவினர் 100 பேர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டனர்.



கோவை: திமுக எம்எல்ஏ வுக்கு அரசு விழாவில் அழைப்பு வழங்காததை கண்டித்து, இன்று காலை அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற திமுகவினர் 100 பேர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 தேர்தலில் 9 இடங்களை அதிமுக கைப்பற்றியது. சிங்காநல்லூர் தொகுதியை மட்டும் திமுக வென்றது. சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ,வாக கார்த்திக் இருந்து வருகிறார். அவர் தொடர்ந்து அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்து, மக்களின் குறைகளை தினம்தோறும் கேட்டு, பல்வேறு விதமான போராட்டங்களை மக்களுக்காக முன்னெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை சாலைப் பணியை துவக்கி வைப்பதற்காக சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதைக் கேள்விப்பட்ட தி.மு.க.வினர் ஆத்திரம் அடைந்தனர். தொடர்ந்து அரசு விழாக்களில், திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு இல்லாமல் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து சிங்காநல்லூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கொடிகளுடன் அங்கு கூடினர்.



இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்த தகவல் அறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.



அப்போது, திமுகவினர் அமைச்சருக்கு எதிராகவும் அதிமுக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இதனால், போலீசாருக்கும் திமுக வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆதலால், இன்று காலை அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.



பிறகு, 100 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...