சரக்கு வாகனங்களுக்கு மத்திய அரசு புதிய விதி; லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்!

கோவை: சரக்கு வாகனங்களை தடை செய்யும்விதமாக மத்திய அரசு விதித்துள்ள புதிய சட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை: சரக்கு வாகனங்களை தடை செய்யும்விதமாக மத்திய அரசு விதித்துள்ள புதிய சட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக உள்ள சரக்கு வாகனங்களை தடைசெய்வதற்கான புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தால் நடுத்தர லாரி உரிமையாளர்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. லாரி தொழிலை மையமாகக் கொண்டுள்ள பல்வேறு தரப்பு தொழிலாளர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



மேலும் புதிய லாரிகள் வாங்க சுமார் ரூபாய் 30 லட்சம் வரை செலவாகும் நிலை உள்ளதால், சரக்கு வாகனப் போக்குவரத்துக்கான வாடகை மும்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. எனவே மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தில் தளர்வு ஏற்படுத்த வேண்டுமென்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், `மத்திய அரசின் இந்தச் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற பெரும் முதலாளிகளை ஊக்குவிக்கும்வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும்சுமார் இரண்டு லட்சம் லாரிகள் இயங்கி வருகின்றன. மேலும் லாரி சார்ந்த தொழிலை நம்பிசுமார் ஐந்து லட்சம் பேர் உள்ளனர். இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

பிள்ளைகளின் படிப்பு, மாதத் தவணை என பல்வேறுசிரமங்களுக்கு நடுவே இந்தத் தொழிலை செய்து வருகிறோம். ஏற்கெனவே நாளுக்கு நாள் உயரும் டீசல் விலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம். சுங்கச்சாவடி கட்டணம், இன்சூரன்ஸ் என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், புதிய லாரிகள் வாங்கினால் 50,000 முதல் 70,000 ரூபாய் வரை மாதத் தவணை தொகை மூலம் கடன் சுமை அதிகரிக்கும். மேலும் இதனால் லாரி வாடகையை மும்மடங்குஉயர்த்தவேண்டிய சூழல் உருவாகும்.

இதைத்தொடர்ந்து விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து சாமானியர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த சட்டத்தின்மூலம் லாரி தொழிலை நம்பியிருக்கும் லாரி உரிமையாளர்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும், எனவே அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...