கோவை: கோவை மாநகராட்சி தனி அலுவலர் கடந்த 3 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் எதுவும் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத மர்மம் என்ன? என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தனது அறிக்கை மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக, கோவை ஆலயம் பவுண்டேஷன் நிறுவனரும், இயக்குனர் தங்கராஜ் என்பவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில், மாநகராட்சி பணிகள் தொடர்பாக கார்த்திக் எம்எல்ஏ விமர்சனம் செய்யும் போது என்னையும் சேர்த்து அவதூறாக விமர்சனம் செய்துள்ளார், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரித்த குனியமுத்தூர் போலீசார் கார்த்திக் எம்எல்ஏ -வை இந்திய தண்டனைச் சட்டம் 153, 504, 505 (I)பி ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி கார்த்திக் எம்எல்ஏ கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது மனுவை விசாரித்த நீதிபதி, கார்த்திக் எம்எல்ஏ தினமும் காலை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.