கோவை: ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெறுவது உறுதியானது. இதையடுத்து வரும் 11-ஆம் தேதி கொடியேற்றப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவுக்குகோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக இந்த ஆண்டு மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், குண்டம் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனைகளைக் கேட்டு கோவை மாவட்ட ஆட்சியருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பி இருந்தனர். இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் குண்டம் திருவிழா நடத்த அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆனைமலை குண்டம் திருவிழா நடத்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 11-ஆம் தேதி தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 24-ஆம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், 26-ஆம் தேதி இரவு குண்டம் பூ வளர்த்தல், தேர் திருவீதி உலாவும், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 27-ஆம் தேதி காலை நடைபெற இருப்பதாக மாசாணியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.