எங்கள்மீது பொய் வழக்கு, சம்பவத்தின்போது நாங்கள் வீட்டில் இருந்தோம்: கோவை இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு!

கோவை: எங்கள்மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, சம்பவத்தின்போது நாங்கள் வீட்டில் இருந்தோம் என்று கோவை இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.


கோவை: எங்கள்மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, சம்பவத்தின்போது நாங்கள் வீட்டில் இருந்தோம் என்று கோவை இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.



இந்து முன்னணியின் கோவை கோட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் அதன் நிர்வாகிகள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 26-ம் தேதி பாரதப் பிரதமரை இழிவுபடுத்தும்வகையில் ஒரு சில அமைப்பினர் சித்தரித்தனர். இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சில அமைப்பினர் உள்ளே புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் ரகளை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் முழுவதும் காவல்துறையினரால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும்போது இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிலரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆரம்பகட்ட விசாரணைகூட நடத்தாமல் இந்து முன்னணியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் தங்கவேலு உள்பட நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள அனைவரும் காவல்துறை சார்பில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது நாங்கள் அனைவரும் வீட்டில் இருந்தோம். எங்களுடன் பாதுகாப்பு அதிகாரிகள் உடனிருந்தனர். எனவே பாதுகாப்பு அதிகாரிகளின் தினசரி நடவடிக்கை நாட்குறிப்பைப் பார்த்து அதில் இந்து முன்னணி நபர்கள் ஈடுபடவில்லை என்பதை போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...