கோவையில் கைது செய்யப்பட பல் மருத்துவரிடம், கேரளா நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை

கோவை: கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கோவையில் மேற்கொண்ட சோதனையில், தினேஷ் என்ற பல் மருத்துவரை கைது செய்து விசாரணைக்கு மலப்புரம்அழைத்து சென்றனர்.


கோவை: கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கோவையில் மேற்கொண்ட சோதனையில், தினேஷ் என்ற பல் மருத்துவரை கைது செய்து விசாரணைக்கு மலப்புரம்அழைத்து சென்றனர்.

கடந்த வாரங்களுக்கு முன்பு சித்திரவள்ளி ராஜன் என்ற மாவோயிஸ்ட் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கேரளா நீதிமன்ற அனுமதி பெற்று நேற்று கோவைக்கு வந்த நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கோவை தடாகம் ரோடு, இடையர்பாளையம், உக்கடம், சுங்கம் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள பார்த்திபன் என்பவரது வீட்டிலும், சுங்கம் பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. பின்னர், இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் பல் டாக்டராக வேலை பார்த்துவந்த தினேஷ் என்பவரை கைது செய்தனர்.

அவரது, அறையில் சோதனை செய்தபோது அங்கு இருந்து இரண்டு லேப்டாப், 5 செல்போன்கள், 2 பேட்டரி, ஒரு சிடி, அடையாள அட்டை, புத்தகங்கள், தேர்தலை புறக்கணிப்பு என்ற போட்டோ காப்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் நக்சல் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்த தினேஷை, விசாரணைக்காக கேரளா, மலப்புத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம், மாவோயிஸ்டுகள் உடனான தொடர்பு குறித்தும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விடிய விடிய கேரளா நக்சல் தடுப்பு போலீஸார் விசாரணை நடத்தியதாகவும், விசாரணை முடிந்ததும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...