கோவை: கொரோனா ஊரடங்கு முன்பு தினசரி இயங்கி வந்த கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை தினசரி ஐந்து முறை இயங்கி வந்த பயணிகள் மெமோ ரயில் சேவை, கடந்த வருடம் மார்ச் மாதம் இறுதியில் நிறுத்தப்பட்டது.
தற்போது, பல்வேறு சிறப்பு ரயில்கள் உள்பட பல்வேறு மார்க்கங்களில் தென்னக ரயில்வே ரயில்களை இயக்கி வரும் நிலையில், பெரும்பாலான மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட உள்ளிட்ட பல தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ள நிலையில், பொது மக்களின் பொதுப் போக்குவரத்தான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது, மக்களிடையே பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது, என்று தெரிவித்தனர்.
தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் சாலை மார்க்கத்தில் மேம்பால பணிகள் நடைபெறுவதன் காரணமாக, பேருந்து முதல் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, மாற்றுப்பாதையில் சென்றுவர பயண தூரம் அதிகரிப்பதுடன், பேருந்துகளில் இருமடங்கு நேரம்வரை ஆகிவிடுகிறது, என்று பல்வேறு சிரமங்களையும், இன்னல்களையும் சந்தித்து வரும் மக்கள் தெரிவித்தனர்.
எனவே, மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஏற்கனவே செயல்பாட்டில் இயங்கிவந்த பயணிகள் மெமோ ரயிலை இரு மார்க்கத்திலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக இயக்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும், என மேட்டுப்பாளையம் பகுதிவாழ் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.