கோவை: வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவையில் வாக்கு எண்ணும் மையங்களை இன்று மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பார்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் முன்னேற்பாடுப் பபணிகள் குறித்து நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, ஆகிய 10 சட்பன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமாக செயல்படவுள்ள கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில், இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வரும் 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரையில் இவ்வளாகத்தில் அமைக்கப்படும், பாதுகாப்பு அறைகளிலேயே (strong room) வைத்து பாதுகாக்கப்படுவதால், காப்பு அறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் தேவைப்பபடும், அடிப்படை கட்டமைப்புகளான மின்சார வசதி, பிரத்தேயக தடுக்குகள் அமைத்தல், வாக்கு எண்ணும் அறைகளை விரிவு படுத்துதல், குடிநீர் வசதி, வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக எடுத்துச்செல்லும் வகையிலான பிரத்யேக நடைபாதை வசதி, முழுபாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர காப்பு அறை உள்ளிட்டவற்றினை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அமைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மாநகர காவல் ஆணையர் அவர்களுடன், ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.