கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் மற்றும் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோவை சாய்பாபாகாலனியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, என்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல பொது செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஈஸ்வரன், துரைராஜ், ராபர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.