கோவை: முஹம்மது நபி(ஸல்) குறித்து யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது என்று பா.ஜ.கவின் தமிழக துணைத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தை, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த மாதம் 27ம் தேதி பிறந்த 15 நாட்களே ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. அன்று முதல் குழந்தைகள் வார்டில் வைத்து இக்குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அடிப்படை பரிசோதனைகள் அனைத்தும் செய்து இன்று அக்குழந்தைக்கு மிருத்துன் என பெயரிட்டு தலைமை மருத்துவமனை முதல்வர் வள்ளி அவர்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தார்.
கடந்த 2020ம் வருடம் முதல் தற்போது வரை பெற்றோரால் கைவிடப்பட்ட 4 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 7 குழந்தைகள் அரசு மருத்துவமனையால் பராமரிக்கப்பட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.