கோவை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நான்காவது நாளாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவையில் ஆட்சியர் அலுவலகத்தை 4வது நாளாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் 3.5 லட்சம் பேருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் ஆதி சேஷையா குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.