கோவை: கோவை மருத்துவமனையில் வேலை பார்த்த துப்பரவு பணியாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மருத்துவமனையில் வேலை பார்த்த துப்பரவு பணியாளர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நகர்நல மையத்தில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர் ரங்கசாமி நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ரங்கசாமி தற்கொலைக்கு செவிலியர் லதா அலுவலர்கள் சாலமன் மற்றும் ரேவதி ஆகிய மூன்று பேரும் தான் காரணம் என்று வீடியோ பதிவு செய்தது வெளியானது. ரங்கசாமி தற்கொலைக்கு காரணமான அவர்கள் 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்று கோவை அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த ரங்கசாமி குடும்பத்தார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ரங்கசாமி தற்கொலைக்கு காரணமான 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஆட்சியரை சந்திக்கச் சென்றனர். ஆர்ப்பாட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.