கோவையில் கொரோனா  தொற்று குறைந்துவிட்டது என்று  அலட்சியம் கூடாது - ஆட்சியர் ராஜாமணி அறிவுரை.

கோவையில் கொரோனா  தொற்று குறைந்துவிட்டது என்று  அலட்சியம் கூடாது - ஆட்சியர் ராஜாமணி அறிவுரை.



கோவை: கோவை: கொரோனோ வைரஸ் குறித்து மக்களிடையே படிப்படியாக விழிப்புணர்வு குறைந்து வருகிறது. அதனால், கோவை மாவட்ட மக்கள் அலட்சியமாக இருக்காமல் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை கையாள வேண்டும், என மாவட்ட கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவையில் புதிய மரபணு மாறிய கொரோனா பாதிப்பு என்பது பதிவாகவில்லை. வெளிநாடுகளில் இருந்து, 143 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு மரபணு மாறிய கொரோனா தொற்று இல்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்.

கோவையில் நாள் ஒன்றுக்கு, 50 என்ற அளவில் கொரோனா பாதிப்பு தொடர்கிறது. மாநகராட்சி பகுதியில் பாதிப்பு ஏற்படும் இடங்களை, கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தற்போது, தொற்று குறைந்து இருப்பினும், மக்கள் அலட்சியம் தவிர்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். முககவசம், சமூக இடைவெளியை எப்போதும் கடைபிடிக்க வேண்டும், இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...