கோவை நஞ்சுண்டாபுரம் - செட்டிபாளையம் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!
கோவை: கோவையில் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தால், அங்கு பரபரப்பு நிலவியது.
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று, நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் யாருடையது? எப்படி தீ பற்றியது என பல்வேறு கோணங்களில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.