கோவை: கோவையில் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டனர். அத்துடன் அவர்கள் அனைவரையும் பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் நடைபெற்றது.

கோவை ரயில்வே போலீசார் ரயில் தண்டவாளங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கோவை போத்தனூர் செல்லும் ரயில் தண்டவாள பகுதியில் ஒரு இளம் பெண் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார். அதை பார்த்த போலீசார் அங்கு சென்று அந்த இளம்பெண்ணிடம் இங்கு குழந்தைகளுடன் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அந்த இளம்பெண் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த இளம்பெண்ணையும் இரண்டு குழந்தைகளையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி முருகம்மாள் (வயது 32) என்பதும், அவரது மகன்கள் லாரன்ஸ் (வயது 15) மற்றும் சரவணவேல் (வயது 5) என்பதும் தெரியவந்தது. வறுமையால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் குழந்தைகளுடன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள வந்ததாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. குணசேகரன் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார். முருகம்மாளை கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூகநலத்துறை அலுவலர் தங்கமணியிடம் ஒப்படைத்தனர்.