கோவை: கோவை அருகே குனியமுத்தூரில் 7 வயது சிறுமியை சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் அடித்து ஊரை விட்டு விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஈச்சனாரி, விநாயகர் கோவில் பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளின் குழந்தைகள் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பகுதியில் வாடகை வீட்டில் வாலிபர் ஒருவர் வசித்து வந்தார்.
நேற்று மாலை அந்த வாலிபர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை நைசாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்தச் சிறுமியிடம் சில்மிஷம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி சத்தம் போட்டார். பின்னர் அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த வாலிபரின் வீட்டுக் கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று வாலிபரை வீட்டிலிருந்து வெளியேற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர், சில்மிஷம் எதுவும் செய்யவில்லை, சில்மிஷம் செய்ய முயற்சி மட்டுமே செய்தேன் என்று வாலிபர் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யாமல் போலீசார் நையப்புடைத்து அறிவுரை கூறினர்.
இதையடுத்து பொதுமக்களும் போலீசாருடன் சேர்ந்து சரமாரியாக அடித்தனர். ஆனாலும் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாலிபர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரை அழைத்து அந்த வாலிபரை வீட்டை விட்டு காலி செய்ய வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் அந்த வாலிபர் மற்றும் அவருடனிருந்த தாத்தா, பாட்டியையும் வெளியேற்றினர். வாலிபருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.