மலைவாழ் மக்களின் இடத்தை மீட்க இயக்குநர் கவுதமன் எஸ் பி யிடம் மனு: தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறார் என்று அம்மக்கள் பதில் மனு..!

கோவை: இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளங்காடு, மடக்காடு மலைவாழ் மக்களின் பூர்வீக இடங்களை மீட்டுத்தர வேண்டும், என்றும் இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது, என்று இயக்குனர் கௌதமன், நேற்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மனு ஒன்றை அளித்தார்.



கோவை: இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளங்காடு, மடக்காடு மலைவாழ் மக்களின் பூர்வீக இடங்களை மீட்டுத்தர வேண்டும், என்றும் இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது, என்று இயக்குனர் கௌதமன், நேற்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மனு ஒன்றை அளித்தார். 



அதற்கு பதில் மனுவாக, தங்கள் கிராமங்களில் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினையை இயக்குநர் கவுதமன் உருவாக்கி வருகிறார் என்றும் அவரை தங்கள் பகுதிக்குள் வர தடை விதிக்க வேண்டும், என்று முள்ளைங்காடு, மடக்காடு ஊர் பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பதில் மனு அளித்துள்ளனர். 



அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, இயக்குநர் கவுதமன், வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் காமராஜ், அவரது மனைவி சத்யஜோதி மற்றும் சிவா, ஆகியோர் ஒருதலை பட்சமாகவும், மலைவாழ் மக்கள் சிலரை அவர்கள் வசம் ஈர்த்து சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு, எங்கள் வாழ்விடத்தில் தேவையற்ற சட்டம், ஒழுங்கு பிரச்சனையை செய்து வருகின்றனர், என்றனர். 

"மேலும், நேற்றைய தினம், ஏதோ குழு திட்டம் குறித்து பேசுவதற்காக, இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முள்ளங்காடு, மடக்காடு போன்ற பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களிடம் ரூபாய் 300 கொடுத்து, உணவும் வழங்குவதாக கூறி அவர்களை அங்கு வரும்படி தெரிவித்தனர். எங்களை வரவழைத்த பின்னர், அவர்கள் சுயநலத்திற்காக வேரு பிரச்சனையை பற்றி பேசியும், எங்களை அதில் சம்பந்தப்படுத்த முயற்சி செய்து வருவது தெரிந்தது", என்று அவர்கள் மனுவில் தெரிவித்தனர். 

இயக்குநர் மற்றும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர், கௌதமன், அவர் மனுவில் தெரிவித்துள்ள நில அபகரிப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சனையை குறித்து அப்பகுதி மக்கள் அவர்கள் மனுவில் எதுவும் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் இடத்திற்கு கவுதமன் வர தடை விதிக்க வேண்டும், என்று கூறியுள்ளது, கவுதமன் அளித்த மனுவின் உண்மைத்தன்மையை கேள்விக் குறியாகியுள்ளது. 

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...